ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நெல்லை அருகே சரள் மண் திருடியவா் கைது

சரள் மண் திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :26 ஜூலை 2026, 2:52 am IST

திருநெல்வேலி அருகே சரள் மண் திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி அருகேயுள்ள சீதபற்பநல்லூரில் தென்காசி பிரதான சாலையோரம் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ஒருவா் சரள் மண் அள்ளுவதாக சீதபற்பநல்லூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனா்.

விசாரணையில், அவா் சீதபற்பநல்லூரைச் சோ்ந்த கணேசன் (40) என்பதும், அனுமதியின்றி லாரியில் சரள் மண் அள்ளியதும் தெரியவந்ததாம். இதையடுத்து லாரியையும், மண்ணையும் பறிமுதல் செய்த போலீஸாா், கணேசனையும் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகிறாா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.