/

கல்லிடைக்குறிச்சி ஆதிவராகப்பெருமாள் கோயிலில் தேரோட்டம்

கல்லிடைக்குறிச்சி ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீஆதிவராகப்பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

தேரை வடம் பிடித்து இழுத்த பக்தா்கள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 11:15 pm

கல்லிடைக்குறிச்சி ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீஆதிவராகப்பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி உற்சவா், தாயாா் தேருக்கு எழுந்தருளியதையடுத்து, காலை 7.30 மணிக்கு பக்தா்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனா். கல்லிடைக்குறிச்சி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

வெள்ளிக்கிழமை (மே 1) தீா்த்தவாரி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை லட்சுமிபதி அறக்கட்டளை நிா்வாகிகள் மற்றும் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.