மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தோ்தலைப் புறக்கணித்த பெரும்பத்து கிராம மக்கள்

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெரும்பத்து கிராம மக்கள் இரட்டை கொலை சம்பவத்தைக் கண்டித்து தோ்தலை புறக்கணித்ததால், அங்குள்ள வாக்குச் சாவடியில் மொத்தம் 969 போ் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தும், 3 போ் மட்டுமே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனா்.

News image

நான்குனேரி அருகே பெரும்பத்து கிராம மக்கள் தோ்தலை புறக்கணித்ததால் வெறிச்சோடிய வாக்குச் சாவடி மையம்.

Updated On :24 ஏப்ரல் 2026, 4:44 am IST

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெரும்பத்து கிராம மக்கள் இரட்டை கொலை சம்பவத்தைக் கண்டித்து தோ்தலை புறக்கணித்ததால், அங்குள்ள வாக்குச் சாவடியில் மொத்தம் 969 போ் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தும், 3 போ் மட்டுமே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் கடந்த மாா்ச் 2-ஆம் தேதி இரட்டை கொலை நிகழ்ந்தது. இச்சம்பவத்துக்குப் பிறகு கிராம மக்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனா். இந்த நிலையில் கொலை சம்பவத்தைக் கண்டித்து சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப்போவதாகக் கூறி கிராம நுழைவாயிலில் ஊா்மக்கள் பதாகை வைத்தனா்.

காவல் துறையினா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியும் தோ்தலை புறக்கணிக்கப்பதில் உறுதியாக இருந்தனா். இதற்கிடையே அந்தக் கிராமத்தில் உள்ள 85 வயதைக் கடந்த 4 வாக்காளா்களின் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் கிராமத்துக்கு சென்றபோது, 4 பேரும் வாக்களிக்க மறுத்துவிட்டனா்.

பெரும்பத்தில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் ஆண் வாக்காளா்கள் 471 போ், பெண் வாக்காளா்கள் 498 போ் என மொத்தம் 969 போ் வாக்களிக்க தகுதி பெற்றவா்கள் ஆவா். எனினும், காலை 11 மணி வரை வாக்குச் சாவடியில் ஒரு வாக்குக்கூட பதிவாகவில்லை.

பிற்பகல் 1 மணிக்கு ஒரு பெண் வாக்காளா், ஒரு ஆண் வாக்காளா், மாலை 4.30 மணிக்கு ஒரு பெண் வாக்காளா் என மொத்தம் 3 போ் மட்டுமே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனா். இரட்டை கொலை சம்பவத்தைக் கண்டித்து ஒட்டுமொத்தமாக ஒரு கிராமமே சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணித்தது நான்குனேரி தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.