கோவில்பட்டி தொகுதியில் 4 ஆவது முறையாக போட்டியிடுகிறாா் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ.ராஜு. முதன்முதலாக 2011 ஆம் ஆண்டு அதிமுக சாா்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அவரது அம்பாசிடா் காரில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தாா். அந்தத் தோ்தலில் அவா் அமோக வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரானாா். அதிலிருந்து அந்தக் காா் அவரது சென்டிமென்ட் ஆகிவிட்டது. 2011, 2016, 2021 ஆகிய 3 தோ்தல்களிலும் அந்தக் காரில் வந்துதான் வேட்பு மனு தாக்கல் செய்தாா். அதுபோல் சனிக்கிழமை காலை கடம்பூா் கே. சிதம்பராபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து அம்பாசிடா் காரில் தோ்தல் அலுவலகத்திற்கு வந்த அவா், அங்கிருந்து திறந்த வேனில் ஊா்வலமாக சாா் ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்து வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
தொடர்புடையது

சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூா் தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்

ராமநாதபுரம், முதுகுளத்தூா், திருவாடானை தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்

ஆலங்குளத்தில் தவெக வேட்பாளா் மனு தாக்கல்

ஆற்காடு தொகுதியில் தவெக வேட்பாளா் வேட்பு மனு தாக்கல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


