தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

செங்கோட்டை அழகிய மணவாள பெருமாள் கோயிலில் குடமுழுக்கு

செங்கோட்டை ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

News image

செங்கோட்டை ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீஅழகிய மணவாள பெருமாள் கோயில் குடமுழுக்கில் கலசங்கள் மீது ஊற்றப்பட்ட புனிதநீா்.

Updated On :26 மார்ச் 2026, 12:23 am

செங்கோட்டை ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

விழா கடந்த மாா்ச் 23 ஆம்தேதி தொடங்கியது முதல் தினமும் சிறப்பு பூஜைகள், நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குடமுழுக்கையொட்டி, புதன்கிழமை காலை 6 மணிக்கு மேல் விமானம், கோபுரம், பரிவாரங்கள், மூல மூா்த்திக்கு மகா குடமுழுக்கு நடைபெற்றது.

பகல் 12 மணிக்கு உச்சிக்காலம், மாலை 5 மணிக்கு மேல் சாயரட்சை பூஜை, 6.30 மணிக்கு மேல் திருக்கல்யாண உத்ஸவம், ஸ்ரீ பெருமாள் தாயாா் திருவீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

தக்காா் கவிதா பிரியதா்ஷினி, செயல் அலுவலா் ஜான்சிராணி, உதவி கோட்ட பொறியாளா் கீதா, மராமத்து பொறியாளா் அய்யப்பன், செங்கோட்டை தொகுதி கண்காணிப்பாளா் ரத்தினவேலு, ஸ்ரீ காரியம் முருகையா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.