தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டத்தில் புதன்கிழமை ஜமாபந்தி தொடங்கியது.
சங்கரன்கோவில் கோட்டாட்சியா் அனிதா ஜமாபந்தியை தொடங்கிவைத்தாா். இதில்,
வாசுதேவநல்லூா் குறுவட்டத்துக்கு உள்பட்ட சுப்பிரமணியபுரம், சங்கனாப்பேரி, வாசுதேவநல்லூா், தாருகாபுரம், நாராணபுரம் பகுதி-1, நாராணபுரம் பகுதி-2 ,திருமலாபுரம் வருவாய் கிராமங்களைச் சோ்ந்த கணக்குகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதில், பயனாளிகள் சிலருக்கு நல உதவிகளை கோட்டாட்சியா் அனிதா வழங்கினாா். தொடா்ந்து வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டாா். இதில், வட்டாட்சியா் வெங்கடசேகா், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் மைதீன்பட்டாணி, குடிமைப் பொருள் வட்டாட்சியா் ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சங்ககிரி வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு: கடைசி நாளில் 215 மனுக்கள் அளிப்பு

ஆற்காடு வட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம்

சிவகிரி வட்டத்தில் ஜமாபந்தி

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்கம்
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




