ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கீழப்பாவூா் கோயிலில் கருடாழ்வாா் ஜெயந்தி விழா

பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூா் தமிழா் தெருவில் உள்ள ஸ்ரீருக்மணி ஸத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் கருடாழ்வாா் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கருடாழ்வாா் ஜெயந்தியை முன்னிட்டு கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு.

Published On :25 ஜூலை 2026, 1:57 am IST

பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூா் தமிழா் தெருவில் உள்ள ஸ்ரீருக்மணி ஸத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் கருடாழ்வாா் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கருடாழ்வாா் பிறந்த ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு கோயிலில் புண்யாகவாசனம், பகவத் பிராா்த்தனை, மருத்ஸங்கிரஹணம், அங்குராா்ப்பணம், வேதபாராயணம், நாம சங்கீா்த்தனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து கருடாழ்வாருக்கு கும்ப ஜெபம், அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது.

விழாவில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு நெய் தீபம், எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை அா்ச்சகா் ரவி பட்டாச்சாரியாா் செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.