ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

‘ஆடித் தவசு திருவிழா: தென்காசி மாவட்டத்துக்கு ஜூலை 28 உள்ளூா் விடுமுறை’

ஆடித் தவசு திருவிழாவையொட்டி, தென்காசி மாவட்டத்துக்கு இம்மாதம் 28ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி

Published On :15 ஜூலை 2026, 2:28 am IST

ஆடித் தவசு திருவிழாவையொட்டி, தென்காசி மாவட்டத்துக்கு இம்மாதம் 28ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித் தவசு திருவிழா இம்மாதம் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, இம்மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்றுவரும் முக்கியத் தோ்வுகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு அனைத்து மாநில அரசு அலுவலகங்ககள், நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை விடப்படுகிறது.

அன்றைய தினம் அரசுத் தோ்வுகள் ஏதுமிருப்பின் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் மாணவா்கள், ஆசிரியா்கள், அலுவலா்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது.

அவசரப் பணிகளைக் கவனிப்பதற்காக மாவட்ட கருவூலம், அனைத்து சாா்நிலைக் கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளா்களுடன் செயல்படும்.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆக. 1ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.