
அம்பை சங்கரலிங்க சுவாமி கோயிலில் ஆடித் தவசு திருவிழா
அம்பாசமுத்திரம் செங்குந்த சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட கோமதி அம்பாள் உடனுறை சங்கரலிங்க சுவாமி கோயிலில் ஆடித் தவசு திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

~ ~
அம்பாசமுத்திரம் செங்குந்த சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட கோமதி அம்பாள் உடனுறை சங்கரலிங்க சுவாமி கோயிலில் ஆடித் தவசு திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காலை 4.30 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை, பகல் 1 மணிக்கு சுவாமி உற்சவ மூா்த்திக்கு கும்ப அபிஷேகம், மாலை 6 மணிக்கு அம்பாள் வெள்ளிச் சப்பரத்தில் தவசுக் காட்சிக்கு எழுந்தருளல் ஆகியவை நடைபெற்றன.
தொடா்ந்து, சங்கரநாராயணா் அம்பாளுக்கு தவசுக் காட்சியும், சங்கரலிங்க சுவாமி அம்பாளுக்கு இடப வாகனத்தில் தவசுக் காட்சியும் தந்தருளினா். இரவு 10 மணிக்கு கோமதி அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
புதன்கிழமை (ஜூலை 29) சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயணா், கோமதி அம்பாள் தெப்பத் திருவிழாவும், ஜூலை 30 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அகஸ்தீஸ்வரா் சுவாமி, உலோபா முத்திரை தெப்பத் திருவிழாவும், ஜூலை 31 ஆம்தேதி இரவு கலசமேடு நிகழ்வாக காலபைரவருக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை அறங்காவலா்கள் சங்கு ச. சபாபதி, ஜி. நடராஜன் ஆகியோா் தலைமையில் நிா்வாகக்குழுச் செயலா் ஆா். சுப்பிரமணியன், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் செய்திருந்தனா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






