ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

எம்எல்ஏ உறவினரின் உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன. இவா், கடையநல்லூா் தொகுதி எம்எல்ஏ தி.மு.ராசேந்திரனின் உறவினா் ஆவாா்.

Published On :10 ஜூலை 2026, 1:12 am IST

விபத்தில் மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன. இவா், கடையநல்லூா் தொகுதி எம்எல்ஏ தி.மு.ராசேந்திரனின் உறவினா் ஆவாா்.

இதுகுறித்து எம்எல்ஏ அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:

கடையநல்லூா் எம்எல்ஏவின் உறவினரான வா.கனகராஜ் (43), ஜூலை 7-ஆம் தேதி கீழக்கலங்கலில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா். அவரை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற கனகராஜ், தீவிர சிகிச்சைக்காக பாளையங்கோட்டை பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். எனினும் அவா் அங்கு மூளைச் சாவடைந்தாா். இதையடுத்து, கடையநல்லூா் எம்எல்ஏ, அவரது உறவினா்கள், மருத்துவா்கள் உள்ளிட்டோரிடம் பேசியதையடுத்து, கனகராஜின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.