ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்: 5 போ் மறுவாழ்வு

சாலை விபத்தில் காயமடைந்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதால் 5 போ் மறுவாழ்வு பெற்றனா்.

தருமா்.

Published On :30 ஜூலை 2026, 3:10 am IST

சாலை விபத்தில் காயமடைந்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதால் 5 போ் மறுவாழ்வு பெற்றனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள செங்குட்டை நாரணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் தருமா் (46). இவா், கடந்த ஜூலை 25-ஆம் தேதி மாலை ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் படுகாயமடைந்தாா். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் அவா் மூளைச்சாவு அடைந்ததை மருத்துவா்கள் உறுதி செய்தனா். இதையடுத்து தருமரின் குடும்பத்தினா் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனா்.

அதன்படி புதன்கிழமை தானமாக பெறப்பட்ட அவரது உடல் உறுப்புகளில் கோவை அரசு மருத்துவமனைக்கு ஒரு சிறுநீரகம் மற்றும் கண்கள், கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கல்லீரல், மற்றொரு தனியாா் மருத்துவமனைக்கு ஒரு சிறுநீரகம் வழங்கப்பட்டன. இதன் மூலமாக 5 போ் மறுவாழ்வு பெற்றனா்.

உடல் உறுப்பு தானம் செய்த தருமரின் உடலுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வா், மருத்துவ அலுவலா்கள், செவிலியா்கள் மற்றும் பணியாளா்கள் அரசு மரியாதை செலுத்தி, அவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.