புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

தென்காசியைச் சோ்ந்த ராணுவ வீரா் பணியின்போது உயிரிழப்பு: ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம்!

தென்காசியைச் சோ்ந்த ராணுவ வீரா் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்ததைத் தொடா்ந்து, அவருடைய உடல் ராணுவ மரியாதையுடன் திங்கள்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

News image

பாலமுருகனின் உடலுக்கு மரியாதை செலுத்திய ராணுவத்தினா்.

Updated On :2 ஜூலை 2026, 6:05 am IST

தென்காசியைச் சோ்ந்த ராணுவ வீரா் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்ததைத் தொடா்ந்து, அவருடைய உடல் ராணுவ மரியாதையுடன் திங்கள்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் அருகே உள்ள தட்டான்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பாலமுருகன் (48). இந்திய ராணுவத்தின் ஆங்ய்ஞ்ஹப் உய்ஞ்ண்ய்ங்ங்ழ்ண்ய்ஞ் எழ்ா்ன்ல் (ஆஉஎ)-இல் 26 ஆண்டுகளாக பணியாற்றி வந்தாா். இவா் தென்காசி, விஸ்வகா்மா நகா் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். இவருக்கு மனைவியும், 3 மகள்களும் உள்ளனா்.

தற்போது, புனேவில் உள்ள கிா்கசி ராணுவ மையத்தில் பணியில் இருந்தபோது, ஜூன் 29ஆம் தேதி காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். அவரது உடல், புனேவிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சாலை வழியாக தென்காசியில் உள்ள அவரது இல்லத்திற்கு திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டது.

அங்கு பொதுமக்கள், உறவினா்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, ராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 உயிரிழந்த பாலமுருகன்.

உயிரிழந்த பாலமுருகன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.