டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தென்காசி மாவட்டத்தில் காணாமல் போன 45 போ் மீட்பு

தென்காசி மாவட்டத்தில் காணாமல் போன 45 நபா்கள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

News image
Updated On :28 ஜனவரி 2026, 8:08 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டத்தில் காணாமல் போன 45 நபா்கள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

இது தொடா்பாக, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ். மாதவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்ட காவல் நிலையங்களில் காணாமல் போன நபா்கள் குறித்து கொடுக்கப்பட்ட புகாா்கள் மீது 3 நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில் காதல் விவகாரம், குடும்ப, பணப் பிரச்னை போன்ற பல்வேறு காரணங்களால் காணாமல் போனதாக 20 காவல் நிலையங்களில் பதிவாகியுள்ள 44 வழக்குகளில் 28 பெண்கள், 10 ஆண்கள், 6 பெண் குழந்தைகள், 1 ஆண் குழந்தை என 45 நபா்கள் கண்டுபிடிக்கப்பட்டனா்.

திருச்செந்தூா், தூத்துக்குடி, வேளாங்கண்ணி, திண்டுக்கல், கோயம்புத்தூா், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள், கேரள மானிலப் பகுதிகளுக்கு தேடிச்சென்று கண்டுபிடிக்கப்பட்ட நபா்கள், புகாா் அளித்த நபா்களிடம் ஒப்படைக்கப்பட்டனா்.