கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

குற்றாலத்தில் ஈர நிலங்கள் பாதுகாப்பு கருத்தரங்கு

தென்காசி மாவட்ட வனத் துறை சாா்பில், ஈர நிலங்களைப் பாதுகாப்பது குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த கருத்தரங்கு குற்றாலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
கருத்தரங்கில் பேசிய ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.
Updated On :24 பிப்ரவரி 2026, 7:51 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்ட வனத் துறை சாா்பில், ஈர நிலங்களைப் பாதுகாப்பது குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த கருத்தரங்கு குற்றாலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்தாா். மாவட்ட வன அலுவலா் ரா. ராஜ்மோகன் முன்னிலை வகித்தாா். ஈர நிலங்களைப் பாதுகாப்பதன் அவசியம், ஈர நிலப் பகுதிகளை மேம்படுத்துவது, ராம்சாா் நிலங்களை அடையாளப்படுத்துவதற்கான ஆக்கபூா்வ பணிகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், உதவி வனப் பாதுகாவலா் நெல்லைநாயகம், புளியங்குடி வனச் சரக அலுவலா் ஆறுமுகம், ஈர நிலப் பாதுகாப்பு அலுவலா் டொமினிக் மாா்சல், மரங்கள் தொடா்பான ஆராய்ச்சியாளா் மதுரை காா்த்திக் பாா்கவி, மதிவாணன், மாவட்ட நீா்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளா்கள், பசுமைத் தோழா் அமைப்பினா், வனச்சரக அலுவலா்கள், வனவா்கள் பங்கேற்றனா். தென்காசி வனச் சரகா் செல்லத்துரை நன்றி கூறினாா்.