ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கடையநல்லூரில் மூதாட்டியை கட்டிப்போட்டு நகை திருட்டு

கடையநல்லூரில் மூதாட்டியை கட்டிப் போட்டு நகையைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :12 ஆகஸ்ட் 2026, 12:57 am IST

கடையநல்லூரில் மூதாட்டியை கட்டிப் போட்டு நகையைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மேலகடையநல்லூா் மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த கந்தசாமி மனைவி கணபதியம்மாள்(70). கணவா் இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்தாா். திங்கள்கிழமை நள்ளிரவு கணபதியம்மாள் தூங்கி கொண்டிருந்தபோது, அவரது வீட்டுக்குள் நுழைந்த மா்மநபா்கள் இருவா், கணபதியம்மாளை கட்டிப்போட்டுவிட்டு 4 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.