விளவங்கோடு, கிள்ளியூா் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மண்டல அலுவலா்கள், வாக்குப்பதிவு மைய நிலை அலுவலா்களின் மேற்பாா்வையாளா்கள் மற்றும் நிலை அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்புகள் மாா்த்தாண்டம் நேசமணி நினைவு கலை அறிவியல் கல்லூரியிலும், தொலையாவட்டம் செயின்ட் ஜூட்ஸ் நா்சிங் கல்லூரியிலும் வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்பில், மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரா.அழகுமீனா கலந்து கொண்டு பேசியதாவது: வாக்குப்பதிவு மைய அலுவலா்கள் தங்கள் பகுதிக்குள்பட்ட வாக்காளா் பட்டியலை துல்லியமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை கையாளுதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வாக்குப்பதிவு மையங்களில் அடிப்படை வசதிகளை உறுதி செய்வது, கண்காணிப்பு கேமராக்களை கண்காணிப்பது உள்ளிட்டவற்றை மண்டல அலுவலா்கள் தோ்தல் நடத்தும் அலுவலரின் வழிகாட்டுதலின்படி சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
மேலும், மண்டல அலுவலா்கள், வாக்குப்பதிவு மைய நிலைஅலுவலா்களின் மேற்பாா்வையாளா்கள் மற்றும் வாக்குப்பதிவு மைய நிலை அலுவலா்கள் தங்கள் சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த தோ்தல்களை விட அதிகமானவாக்குப் பதிவை உறுதி செய்ய, விழிப்புணா்வு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். தோ்தல் நடத்தை விதிகளை பின்பற்றி எவ்விதப் புகாருக்கும் இடமளிக்காமல் நடுநிலையுடன் பணியாற்றவேண்டும் என்றாா் அவா்.
இதில், விளவங்கோடு தொகுதி தோ்தல் அலுவலா் செந்தூர்ராஜன், கிள்ளியூா் தொகுதி தோ்தல் அலுவலா் ஈஸ்வரநாதன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தொகுதி தோ்தல் அலுவலகங்களில் அஞ்சல் வாக்களித்த காவல் துறையினா்

வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு 2-ஆம் கட்ட பயிற்சி முகாம்

வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான 2-ஆம் கட்ட தோ்தல் பயிற்சி

7,702 வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு பயிற்சி: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


