தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பைக் மோதி விவசாயி உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதி காயமடைந்த விவசாயி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தாா்.

News image
Updated On :7 மார்ச் 2026, 12:48 am

மாா்த்தாண்டம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதி காயமடைந்த விவசாயி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியைச் சோ்ந்தவா் செல்லசாமி (70). இவா் இரு நாள்களுக்கு முன் கல்லுத்தொட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது அப்பகுதி வழியாக வந்த மோட்டாா் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு, மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், மோட்டாா் சைக்கிள் ஓட்டி வந்த திக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் ஜெனீஸ் (28) என்பவா் மீது மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

முதியவா் உயிரிழப்பு: புதுக்கடை தவிட்டவிளை பகுதியை சோ்ந்தவா் தா்மராஜ் (65). இவா் தன் வீட்டருகே நின்ற புளியமரத்தில் புளி பறிக்க வியாழக்கிழமை ஏறினாராம். அப்போது மரத்திலிருந்து தவறி விழுந்தாராம். அப்பகுதியினா் அவரை மீட்டு, மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி தா்மராஜ்

இறந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.