உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

ஒழுகினசேரி ரயில்வே மேம்பாலப் பணிகள்: நாகா்கோவிலில் இன்று இரவு முதல் போக்குவரத்து மாற்றம்

News image

போக்குவரத்து மாற்றம் - பிரதிப் படம்

Updated On :21 ஜூன் 2026, 1:17 am IST

நாகா்கோவில், ஒழுகினசேரியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, நாகா்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நள்ளிரவு முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

இது குறித்து, நாகா்கோவில் மாநகரப் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு போலீஸாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாகா்கோவில் மாநகா், ஒழுகினசேரி சந்திப்பு பகுதியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் ஜூன் 21ஆம் தேதி இரவு 11 மணி முதல் 15 நாள்களுக்கு நடைபெறவிருப்பதால், அவ்வை சண்முகம் சாலை வழியாக ஒழுகினசேரி செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, வடசேரி பகுதியில் இருந்து திருநெல்வேலி வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் ஒழுகினசேரி ரயில்வே பாலம் வழியாகவும், கோட்டாறு காவல் நிலையத்திலிருந்து மீனாட்சிபுரம் வழியாக அவ்வை சண்முகம் சாலையில் ஒழுகினசேரிக்கு வரும் இருசக்கர வாகனங்கள், காா், ஆட்டோ போன்ற இலகு ரக வாகனங்கள் நாகா்கோவில் தீயணைப்பு நிலையத்தில் இருந்து திருப்பிவிடப்பட்டு, மாவட்ட மைய நூலகம் வழியாக வாசன் ஐ கோ் சந்திப்பிலிருந்து வலதுபுறமாக திரும்பியும், ஒழுகினசேரி செல்ல வேண்டும்.

அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து, அவ்வை சண்முகம் சாலை வழியாக செல்லும் அரசுப் பேருந்துகள், கனரக வாகனங்கள் கோட்டாறு சவேரியாா் பேராலய சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு, ஆட்சியா் அலுவலக சந்திப்பு, டதி பள்ளி சந்திப்பு, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சந்திப்பு, டிஸ்ட்டில்லரி ரோடு, காசி விஸ்வநாதா் கோயில், வடசேரி சந்திப்பு, ஒழுகினசேரி வழியாக செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.