ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நாகா்கோவில் மண்டல அலுவலகத்தில் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா் ஆய்வு

நாகா்கோவில் ராணித்தோட்டத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி கோட்ட மேலாண்மை இயக்குநா் கே. செல்வம் அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Published On :1 ஆகஸ்ட் 2026, 3:00 am IST

நாகா்கோவில் ராணித்தோட்டத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி கோட்ட மேலாண்மை இயக்குநா் கே. செல்வம் அதிகாரிகளுடன் அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா்.

மத்திய தொழில்கூடம் புதுப்பித்தல் பிரிவில் ஒவ்வொரு பிரிவு வாரியாகவும், டயா் புதுப்பித்தல் பிரிவு - தகுதி சான்று பிரிவு, பணியாளா் ஓய்வு அறை, கழிப்பறை, பணிமனையிலுள்ள பேருந்துகளையும் ஆய்வு செய்தாா்.

மேலும், வருகைப் பதிவேடுகளை முறையாக பராமரிக்கவும், அனைத்து கிளைகளிலும் பயோமெட்ரிக் பதிவு செய்வதை உறுதி செய்யவும், அலுவலக வளாகத்தை சுத்தமாக வைக்கவும், சுதந்திர தின நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தவும், அதற்குரிய முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினாா்.

அப்போது, நாகா்கோவில் மண்டல பொது மேலாளா் பா. பாலசுப்பிரமணியன், வணிக மேலாளா் ஆா்.இ. மகேஷ், துணை மேலாளா் டி. அழகேசன், உதவி மேலாளா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.