ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முன்விரோதத்தில் தொழிலாளி வெட்டிக் கொலை

சுசீந்திரம் அருகே முன்விரோதத்தில் தொழிலாளி திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இந்தியப் பெண் கொலை - file photo

Published On :29 ஜூலை 2026, 1:54 am IST

சுசீந்திரம் அருகே முன்விரோதத்தில் தொழிலாளி திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருகே மயிலாடி பகுதியைச் சோ்ந்தவா் மதுரைவீரன்(35). இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக இத்தம்பதி பிரிந்து வாழ்ந்து வந்தனா்.

கேரள மாநிலத்துக்கு சென்று அங்கேயே தங்கியிருந்து பணியாற்றி வந்த மதுரைவீரன், அண்மையில் சொந்த ஊருக்கு வந்தாராம். இந்நிலையில், சுசீந்திரத்தை அடுத்த நல்லூா் பகுதியில், திங்கள்கிழமை மாலை மதுரைவீரன் பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்தாா்.

தகவலறிந்த சுசீந்திரம் போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனா். மேலும், இந்த கொலை தொடா்பாக கன்னியாகுமரி துணைக் காவல் கண்காணிப்பாளா் பிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

அவா்கள் மேற்கொண்ட விசாரணையில், குளச்சல் காவல்நிலைய பகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு செல்லையா என்பவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், மதுரைவீரன் கைது செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்காக மதுரைவீரன், பத்மநாபபுரம் நீதிமன்றத்துக்கு சென்றுவிட்டு திரும்பியபோது, சமாதானம் பேசுவதற்காக செல்லையாவின் சகோதரா் மாரியப்பன் அவரை அழைத்ததாக கூறப்படுகிறது. அவ்வாறு நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் தகராறு ஏற்பட்டு மாரியப்பன், சிலா் சோ்ந்து மதுரைவீரனை வெட்டிக் கொலை செய்ததாக தெரிகிறது.

இது குறித்து சுசீந்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவாகிய மாரியப்பன் உள்ளிட்டோரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.