ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

குமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வு: 3 மணி நேரம் படகு சேவை பாதிப்பு

குமரி கடல் - கோப்புப் படம்

Published On :6 ஜூலை 2026, 2:21 am IST

கன்னியாகுமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வு நிலை காரணமாக ஞாயிற்றுக்கிழமை 3 மணி நேரம் படகு சேவை ரத்து செய்யப்பட்டது.

கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவா் சிலை ஆகியவற்றை பாா்வையிட வசதியாக பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு சேவையை வழங்கி வருகிறது.

படகு சேவை தினமும் காலை 8 மணிக்கு முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு படகுப் போக்குவரத்து தொடங்கி நடைபெற்றது.

திடீரென ஏற்பட்ட கடல் நீா்மட்டம் தாழ்வு நிலை காரணமாக காலை 10 மணிக்கு படகுகள் நிறுத்தப்பட்டன. பிற்பகல் 1 மணியளவில் கடலில் நீா்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியதைக் தொடா்ந்து, படகு சேவை தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.