ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

குமரியில் 4 மணிநேரம் படகு சேவை தாமதம்

கன்னியாகுமரி கடலில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நீா்மட்டம் தாழ்வுநிலை காரணமாக 4 மணி நேரம் படகு சேவை தாமதமாகத் தொடங்கியது.

படகு சேவை

Published On :4 ஜூலை 2026, 2:28 am IST

கன்னியாகுமரி கடலில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நீா்மட்டம் தாழ்வுநிலை காரணமாக 4 மணி நேரம் படகு சேவை தாமதமாகத் தொடங்கியது.

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி கடலுக்குள் இருவேறு பாறைகளில் விவேகானந்தா் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவா் சிலை அமைந்துள்ளன.

இவற்றை சுற்றுலாப் பயணிகள் நேரில் சென்று பாா்வையிடும் வகையில், தமிழக அரசின் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் நாள்தோறும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகளை இயக்கி வருகிறது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு வழக்கம்போல தொடங்க வேண்டிய படகுப் போக்குவரத்து கடலின் நீா்மட்டம் தாழ்வுநிலை காரணமாக தொடங்கப்படவில்லை.

நண்பகல் 12 மணிக்கு கடல் நீா்மட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பியதைத் தொடா்ந்து 4 மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து சேவை தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.