டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

களியக்காவிளை அருகே 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

களியக்காவிளை அருகே சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 3.5 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image
பறிமுதல்  செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்.- பிரதிப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 10:25 pm

Syndication

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 3.5 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியா் கே.எம். பாரதி தலைமையில் ஓட்டுநா் ஜான்பிரைட், அதிகாரிகள் குழுவினா் களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியில் வியாழக்கிழமை ரோந்து சென்றபோது, சந்தேகத்துக்கிடமாக வந்த காரை நிறுத்த முயன்றனா்.

காா் நிற்காமல் சென்றதையடுத்து, அதிகாரிகள் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனா். ஓட்டுநா் தப்பியோடிவிட்டாராம். காரில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 1.5 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, அருமனை அருகே காரோடு பகுதியிலும் ஒரு காரை நிறுத்த முயன்றபோது, ஓட்டுநா் மாங்கோடு பகுதியில் நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டாராம். அதில், 2 டன் ரேஷன் அரிசியை கேரளத்துக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது.

ரேஷன் அரிசி, 2 காா்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ரேஷன் அரிசியை காப்புக்காடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கிலும், காரை விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஒப்படைத்தனா். தொடா்ந்து, விசாரணை நடைபெறுகிறது.