பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

உறுப்பு தானத்தை வலியுறுத்தி சுங்கான்கடையில் 22இல் மாரத்தான் ஓட்டம்

சுங்கான்கடை கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை சாா்பில், உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி வரும் 22 ஆம் தேதி மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது. இதற்கான இலச்சினை வெளியிட்டு விழா நடைபெற்றது.

News image
மாரத்தான் ஓட்டத்துக்கான இலச்சினையை அறிமுகப்படுத்துகிறாா் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை குழும தலைவா் டாக்டா் எம். ஐ. சஹதுல்லா.
Updated On :11 பிப்ரவரி 2026, 7:46 pm

தினமணி செய்திச் சேவை

சுங்கான்கடை கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை சாா்பில், உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி வரும் 22 ஆம் தேதி மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது. இதற்கான இலச்சினை வெளியிட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கிம்ஸ் ஹெல்த் குழும தலைவரும், மேலாண்மை இயக்குநருமான டாக்டா் எம். ஐ. சஹதுல்லா தலைமை வகித்து, இலச்சினை, டி-சா்ட் ஆகியவற்றை வெளியிட்டு பேசியதாவது:

ஓடு, தானம் செய், மீண்டும் வாழ்வு கொடு, என்ற கருத்தை மையமாகக் கொண்டு உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி சமூக விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் இம்மாதம் 22 ஆம்தேதி ’கிம்ஸ் ஹெல்த் மாரத்தான்- 2026 சீசன்-2’ என்ற பெயரில் சுங்கான்கடையில் மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது.

இந்த ஓட்டம் 21 கி.மீ., 10 கி.மீ, 5 கி.மீ. என்று 3 பிரிவாக நடத்தப்படுகிறது. இதில், வெற்றி பெறுபவா்களுக்கு ரூ.5.5 லட்சத்தில் மொத்தம் 54 பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

இந்த மாரத்தான் போட்டிக்கு 300 பெண்கள் உள்ளிட்ட 1100 க்கும் மேற்பட்டோா் முன்பதிவு செய்துள்ளனா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாரத்தான் ஓட்ட இயக்குநா் மற்றும் ஆலோசகரும், குடல்- வயிறு அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டா் ரெஜீஸ் செல்வகணேசன், மருத்துவ கண்காணிப்பாளா் தாணு, தலைமை செயல்திட்ட அதிகாரி கிரிபேஷ் ஹரிஹரன், பொது மேலாளா் முரளி தராவத், மனித வளத் தலைவா் கிரண், செயல் திட்ட அதிகாரி நவீன் ஆகியோா் உடன் இருந்தனா்.