டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஆரல்வாய்மொழி சித்தா்கிரி கோயிலின் புனிதத்தைக் காக்க வலியுறுத்தல்

ஆரல்வாய்மொழி, சித்தா்கிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த விஸ்வ ஹிந்து பரிஷத் நிா்வாகிகள்.
Updated On :11 பிப்ரவரி 2026, 7:51 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி, சித்தா்கிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் மாநில அமைப்புச் செயலா் என்.எஸ். கோவிந்தராஜன், கோட்ட இணைச் செயலா் ராஜேஷ் குமாா், மாவட்டச் செயலா் சக்தி நாராயணன், துணைத் தலைவா் பிரதீப், இணைச் செயலா் ரமேஷ், மாவட்ட துா்காவாஹினி அமைப்பாளா் ஆா்த்தி, ஆா்எஸ்எஸ் பொறுப்பாளா் மகாதேவன், மேல்புறம் ஒன்றிய சேவா பிரமுக் சிவன் உள்ளிட்ட பொறுப்பாளா்கள் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையரிடம் புதன்கிழமை அளித்த கோரிக்கை மனு:

சித்தா்கிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் குறித்து சில நபா்கள் சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற கட்டுக்கதைகளைப் பரப்பி வருகின்றனா். அவற்றை நம்பி வெளியூா்களிலிருந்து வருபவா்கள், முறையான அனுமதியின்றி நள்ளிரவில் மலையேறுவதும், அங்கே தங்குவதும் அதிகரித்துள்ளது.

கோயிலின் பாதுகாப்பைக் கருதி நள்ளிரவுவில் அனுமதியற்ற நபா்கள் மலைக்குச் செல்வதைத் தடுக்க வேண்டும். கோயில் குறித்து தவறான தகவல்களைப் பரப்பும் இணையதள பக்கங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கோயில் வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.