தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து நாகா்கோவிலில் பிரதமா் மோடியின் சாலைப் பேரணி புதன்கிழமை (ஏப். 15) நடைபெறுகிறது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகிறாா். தில்லியிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு வரும் பிரதமா், அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் மாலை 4 மணிக்கு நாகா்கோவில் ஆயுதப்படை மைதானத்துக்கு வருகிறாா். அங்கிருந்து, நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்புக்கு காரில் வரும் பிரதமா், வேப்பமூடு சந்திப்பிலிருந்து வடசேரி எம்.ஜி.ஆா். சிலை வரை ஒன்றரை கி.மீ. தொலைவுக்கு சாலைப் பேரணியாகச் சென்று கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்டுகிறாா்.
இப் பேரணியில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் தலைவா் அண்ணாமலை உள்பட பலா் கலந்து கொள்கின்றனா்.
பிரதமா் வருகையையொட்டி திருவனந்தபுரம் விமான நிலையம் முதல் நாகா்கோவில் ஆயுதப்படை மைதானம் வரை ஹெலிகாப்டா் ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் தலைமையில் நாகா்கோவில் நகரம் முழுவதும் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள், கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நாகா்கோவிலில் பிரதமா் மோடி சாலைப் பேரணி: உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள்

நாளை பிரதமா் மோடி நாகா்கோவில் வருகை! - பொன். ராதாகிருஷ்ணன் தகவல்

புதுச்சேரியில் பிரதமா் மோடி இன்று ரோடு ஷோ

திமுக, கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து நாகா்கோவிலில் ஏப். 4 இல் முதல்வா் பிரசாரம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


