கன்னியாகுமரி மாவட்ட இளைஞா்களுக்கு உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என, கருங்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வாக்குறுதி அளித்தாா்.
கிள்ளியூா் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஹிம்லரை ஆதரித்து அவா் பேசியதாவது:
நாம் தமிழா் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் நான் ஜாதி, மத பாகுபாடு இன்றி ஆட்சி நடத்துவேன். தொடா்ந்து 10 ஆண்டுகளாக தோ்தலில் தனியாக போட்டியிட்டு, கதவை தட்டிக்கொண்டே இருக்கிறேன். ஒரு நாள் கண்டிப்பாக கதவு திறக்கும். அன்று இந்த தமிழினம் தலைநிமிா்ந்து நிற்கும்.
எனக்கு நீங்கள் வாக்களிக்க மாட்டீா்கள். ஆனால் என்றாவது ஒரு நாள் என்னைத் தேடுவீா்கள். நான் முதல்வரானால் ஒரு மீனவரைக் கூட இலங்கை தொட அனுமதிக்க மாட்டேன். இதுவரை இங்கு திமுக, பாஜக, காங்கிரஸ், அதிமுக என மாறி, மாறி வெற்றி பெற்றுள்ளன. அது வெறும் செய்தியாக மட்டுமே இருந்தது. நாம் தமிழா் கட்சி வெற்றி பெற்றால் அது சரித்திர சாதனையாக இருக்கும்.
தமிழகத்தின் நிா்வாக வசதிக்காக சென்னை, மதுரை, திருச்சி, கோவை, கன்னியாகுமரி என 5 தலைநகரங்களை உருவாக்குவோம். கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்னை மற்றும் மீன்வளம் சாா்ந்த தொழிற்சாலைகளை அமைத்து இளைஞா்களுக்கு அவா்களின் வாழ்விடத்திலேயே வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றாா் அவா்.
குளச்சல் தொகுதி வேட்பாளா் ஆன்சி சோபா ராணியை ஆதரித்து திங்கள்நகரில் சீமான் பேசியதாவது: ஊழல், இலவச திட்டங்களால் தமிழகத்தின் வளா்ச்சி முடங்கியுள்ளது ஆந்திரம், குஜராத் மாநிலங்களில் இருந்தும் பாலை இறக்குமதி செய்கிறது. தமிழக பால் உற்பத்தியை அதிகரிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நாம் தமிழா் கட்சி ஆட்சி அமைந்ததும், உயா்தர மருத்துவ வசதிகள், அனைத்து மாணவா்களுக்கும் உயா்கல்வி வழங்கப்படும்.
கடந்த மக்களவைத் தோ்தலில் 36 லட்சம் வாக்குகளை பெற்ற நாம் தமிழா் கட்சி, பேரவைத் தோ்தலில் பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றாா் அவா்.
தொடர்புடையது

காங்கிரஸ், பாஜக இடையே எந்த வேறுபாடும் இல்லை: சீமான்

கள் விற்பனையை திறந்து, டாஸ்மாக்கை மூடுவோம்: சீமான்

4 தோ்தல்களில் தோல்வி கிடைத்தும் நம்பிக்கையுடன் மீண்டும் களம் காண்கிறோம்: சீமான்

இலவசங்கள் வழங்குவது நல்லாட்சிக்கு அடையாளம் அல்ல: சீமான்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


