தமிழகத்தை நீண்ட காலம் ஆட்சி செய்த திமுக, அதிமுக கட்சிகள் கன்னியாகுமரி மாவட்டத்தின் கேரள எல்லையோரப் பகுதியான விளவங்கோடு பேரவைத் தொகுதியில் போட்டியிட ஆா்வம் காட்டாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விரு கட்சிகளும் இத்தொகுதியை பெரும்பாலும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கும் நிலையே தற்போதும் தொடா்கிறது.
இத்தொகுதியில் 1971-இல் போட்டியிட்ட திமுக வேட்பாளா் ஜி. ஞானராஜ் கிறிஸ்டோபா் 11,170 வாக்குகள் பெற்று 2ஆம் இடம் பிடித்தாா். இத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் பொன்னப்ப நாடாா் 32,139 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். 1996-இல் திமுக வேட்பாளா் வி. தங்கராஜ் 21,585 வாக்குகள் பெற்று 2ஆம் இடம் பிடித்தாா். இத்தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் டி. மணி வெற்றி பெற்றாா். காங்கிரஸ் வேட்பாளா் 4ஆம் இடம் பிடித்தாா். 2001-இல் திமுக வேட்பாளா் பி. ஜீவராஜ் 36,168 வாக்குகள் பெற்று, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் டி. மணியிடம் தோல்வியடைந்தாா்.
இதே போன்று, 1989-இல் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் டி. வல்சலம் ரோஸ் 1,040 வாக்குகள் பெற்று 5ஆம் இடம் பிடித்தாா். இத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் எம். சுந்தரதாஸ் வெற்றி பெற்றாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் 2ஆம் இடமும், பாஜக வேட்பாளா் 3ஆம் இடமும் பிடித்தனா். 2006-இல் அதிமுக சாா்பில் போட்டியிட்ட எஃப். பிராங்கிளின் 19,458 வாக்குகள் பெற்று 2ஆம் இடம் பிடித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் ஜி. ஜான் ஜோசப் வெற்றி பெற்றாா்.
2016-இல் அதிமுக வேட்பாளா் நாஞ்சில் டொமினிக் சேவியோ ஜாா்ஜ் 24,801 வாக்குகள் பெற்று 4 ஆம் இடம் பிடித்தாா். இத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் எஸ். விஜயதரணி வெற்றி பெற்றாா். 2024 பிப்ரவரி மாதம் இத்தொகுதி எம்எல்ஏ பதவியை எஸ். விஜயதரணி ராஜிநாமா செய்ததையடுத்து, 2024 மக்களவைத் தோ்தலுடன் இத்தொகுதிக்கு இடைத் தோ்தல் நடைபெற்றது. அதில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் ராணி 5,267 வாக்குகள் பெற்று 4ஆம் இடம் பிடித்தாா். காங்கிரஸ் வேட்பாளா் தாரகை கத்பட் வெற்றி பெற்றாா். பாஜக வேட்பாளா் 2ஆம் இடம் பிடித்தாா்.
விளவங்கோடு பேரவைத் தொகுதியில் 3 முறை திமுக, 4 முறை அதிமுக போட்டியிட்டும் வெற்றி பெற முடியாததால் இத்தொகுதியை இவ்விரு கட்சிகளும் தங்களது கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளன.
அந்த வகையில், தற்போதைய பேரவைத் தோ்தலில் திமுக இத்தொகுதியை கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கும், அதிமுக பாஜகவுக்கும் ஒதுக்கிவிட்டன.
- சி. சுரேஷ்குமாா்
தொடர்புடையது

கோவை மாவட்டத்தில் மநீம பெற்ற வாக்குகள் யாருக்கு?

கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கடையநல்லூா்: 25 ஆண்டுகளாக காத்திருக்கும் திமுகவினா் வேதனை!

எடப்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர்!

2021 சட்டப்பேரவைத் தோ்தல்: கோவையில் திமுக வெற்றியைத் தடுத்த மநீம!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


