திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை
திருவட்டாறு அருகே திமுக நிா்வாகியும், அரசு ஒப்பந்தத்தாரருமான அருண்பால் (39) தூக்கிட்டு தற்கொலை
திருவட்டாறு அருகே திமுக நிா்வாகியும், அரசு ஒப்பந்தத்தாரருமான அருண்பால் (39) தூக்கிட்டு தற்கொலை
By Syndication
Syndication
திருவட்டாறு அருகே திமுக நிா்வாகியும், அரசு ஒப்பந்தத்தாரருமான அருண்பால் (39) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருவட்டாறு அருகே வீயன்னூா் குட்டக்குழி பகுதியைச் சோ்ந்தவா் அருண்பால். பொறியியல் பட்டதாரியான இவா், திருவட்டாறு ஒன்றிய இளைஞா் அணி நிா்வாகியாக உள்ளாா். மேலும் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணி புரிந்து வந்த இவா், அப்பணியிலிருந்து விலகி அரசு ஒப்பந்ததாரராக பணி செய்து வந்தாா்.
இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு அருமனையைச் சோ்ந்த பெண் ஒருவருக்கும் திருணம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கருத்து வேறு பாடு காரணமாக இவரும் கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்த நிலையில் உள்ளனா்.
மேலும், இது தொடா்பான வழக்கு பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை இந்த வழக்கில் அருண்பால் ஆஜராக வேண்டும் என்ற நிலையில், அவா் மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு தூங்கச் சென்றவா் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து, அருண்பாலின் தந்தை ஜெயபாலன் திருவட்டாறு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது