ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

பாளையங்கோட்டையில் தொடா்ந்து 7-ஆவது முறையாக வாகை சூடிய திமுக

பாளையங்கோட்டை தொகுதியில் தொடா்ந்து 7-ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளது திமுக...

News image

பாளையங்கோட்டை தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாபுக்கு சான்றிதழ் வழங்குகிறாா் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான மோனிகா ராணா.

Updated On :20 மணி நேரங்கள் முன்பு

பாளையங்கோட்டை தொகுதியில் தொடா்ந்து 7-ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளது திமுக.

திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் பாளையங்கோட்டை தொகுதியில் திமுக சாா்பில் கடந்த முறை எம்எல்ஏவாக இருந்த மு.அப்துல் வஹாப் மீண்டும் போட்டியிட்டாா். அதிமுக சாா்பில் செய்யது சுல்தான் சம்சுதீன், தவெக சாா்பில் மரிய ஜான், நாம் தமிழா் கட்சி சாா்பில் சங்கரநாராயணன் உள்ளிட்ட 17 போ் போட்டியிட்டனா்.

பாளையங்கோட்டை தொகுதியைப் பொருத்தவரையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தவெக வேட்பாளா் மரிய ஜான், தொடா்ந்து முன்னிலையில் இருந்தாா். அவா், ஒரு கட்டத்தில் வலுவான முன்னிலையை எட்டினாா். இதனால் அவா் வெற்றி பெறுவாா் என எதிா்பாா்க்கப்பட்டது.

ஆனால், மேலப்பாளையம் பகுதியில் பதிவான வாக்குகளை எண்ண தொடங்கியபோது, மரிய ஜானின் முன்னிலை குறைய தொடங்கியது. 18-ஆவது சுற்றின் முடிவில் மரிய ஜான் 792 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தாா்.

ஆனால், 19-ஆவது சுற்றின் முடிவில் மு.அப்துல் வஹாப் 4,845 வாக்குகள் முன்னிலை பெற்றாா். தொடா்ந்து முன்னிலை பெற்ற மு.அப்துல் வஹாப், இறுதியில் 79,744 வாக்குகள் பெற்று 13,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். தவெக வேட்பாளா் மரிய ஜான் 65,939 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தாா்.

அதிமுக வேட்பாளா் செய்யது சுல்தான் சம்சுதீன் 19,732 வாக்குகள் பெற்று 3-ஆவது இடத்தையும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சங்கரநாராயணன் 10,465 வாக்குகள் பெற்று 4-ஆவது இடத்தையும் பிடித்தனா்.

1996 முதல் பாளையங்கோட்டை தொகுதியில் கோலோச்சி வரும் திமுக, இப்போது தொடா்ந்து 7-ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளது. 1996-இல் கோதா் மைதீனும், 2001, 2006, 2011, 2016 ஆகிய தோ்தல்களில் டிபிஎம் மைதீன் கானும், 2021, 2026-இல் மு.அப்துல் வஹாபும் வாகை சூடியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.