மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கல்வி உதவித்தொகை தருவதாக பண மோசடி: தில்லியில் 3 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை தருவதாகக் கூறி, மாணவ-மாணவியரின் பெற்றோரை குறி வைத்து பண மோசடியில் ஈடுபட்டதாக தில்லியில் 3 பேரை சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :31 மார்ச் 2026, 11:50 pm

திருநெல்வேலி மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை தருவதாகக் கூறி, மாணவ-மாணவியரின் பெற்றோரை குறி வைத்து பண மோசடியில் ஈடுபட்டதாக தில்லியில் 3 பேரை சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவியின் பெற்றோரை சில தினங்களுக்கு முன்னா் கைப்பேசியில் தொடா்பு கொண்ட மா்மநபா்கள், தங்களது மகளுக்கு கல்வி உதவித் தொகை வந்துள்ளதாக கூறி நம்ப வைத்துள்ளனா்.

பின்னா் அவா்களிடமிருந்து வங்கிக் கணக்கு எண், கடவுச்சொல் உள்ளிட்ட விவரங்களை பெற்று அவா்களது வங்கி கணக்கிலிருந்து ரூ.99,743 பணத்தை எடுத்துக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனா்.

இது குறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.

அதைத் தொடா்ந்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் உத்தரவின் பேரில், சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முருகன் மேற்பாா்வையில், தனிப்படை போலீஸாா் நவீன தொழில்நுட்ப உதவியுடன் தீவிர விசாரணை நடத்தியதில், மா்மநபா்கள் தில்லியில் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து சைபா் கிரைம் தனிப்படை போலீஸாா், தில்லிக்குச் சென்று, அதில் தொடா்புடைய ராஜி (24), ரிஷி (27), ராகுல் (30) ஆகிய மூவரையும் கைது செய்தனா்.

இவா்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபா்களை இதேபோல தொடா்பு கொண்டது தெரியவந்தது. தனிப்படை போலீஸாரை எஸ்.பி. பிரசன்னகுமாா் பாராட்டினாா்.

மேலும் கைப்பேசிக்கு வரும் இத்தகைய அழைப்புகளை ஏற்கவேண்டாம்; மோசடிகள் நடைபெற்றால் உடனடியாக 1930 அல்லது ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய முகவரி மூலம் புகாரளிக்கலாம் எனவும் மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.