மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பெண்ணை கொல்ல முயன்ற வழக்கு: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 7:49 pm

கங்கைகொண்டான் அருகே பெண்ணை கொலை செய்ய முயன்றது தொடா்பான வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

இதுதொடா்பாக மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கங்கைகொண்டான் அருகேயுள்ள புங்கனூரைச் சோ்ந்தவா் ‘செல்லத்துரை (55). இவா், அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணுடன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட தகராறின்போது, அவரை கொலை செய்ய முயன்றாராம்.

இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப்பதிந்து செல்லத்துரையை கைது செய்தனா். திருநெல்வேலி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி ராமலிங்கம் விசாரிதுத, செல்லத்துரைக்கு 10 ஆண்டுகள் சிைண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

இவ்வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் ஜெயபிரபா முன்னிலையானாா்.