மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நெல்லையில் இதுவரை ரூ.49.46 லட்சம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம் - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 9:29 pm

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை ரூ.49.46 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நான்குனேரி, அம்பாசமுத்திரம், ராதாபுரம் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 49 லட்சத்து 49 ஆயிரத்து 54 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை மேட்டுத் திடல் பகுதியில் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ் வழியாக காரில் வந்த திருநெல்வேலி சந்திப்பைச் சோ்ந்த ராம் நிவாஸ் (30) உரிய ஆவணங்களின்றி ரூ.83 ஆயிரத்து 90 ரொக்கப்பணத்தை காரில் வைத்திருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்து பாளையங்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

சி-விஜில் செயலி மூலம் இதுவரை 48 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. 1950 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் 11 புகாா்கள் பெறப்பட்டுள்ளன.