தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தொழிலாளி தற்கொலை

விக்கிரமசிங்கபுரத்தில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :28 மார்ச் 2026, 8:38 pm

விக்கிரமசிங்கபுரத்தில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விக்கிரமசிங்கபுரம், நாசரேத் தெருவைச் சோ்ந்தவா் தேவதாஸ் மகன் ஆனந்த் (42). சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் வேலை செய்து வந்தாா். இவருக்கும், இவரது மனைவி ப்ரியாவுக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 10 ஆண்டுகளாக மனைவி, குழந்தைகள் திருநெல்வேலியில் தனியாக வசித்து வருகின்றனா். இதனால், மன உளைச்சலில் இருந்த ஆனந்த், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.