மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு ஓராண்டு சிறை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 6:43 pm

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திருநெல்வேலி மாவட்டம் மாவடி பகுதியைச் சோ்ந்தவா் அரவிந்த் (22). லாரி ஓட்டுநா். இவா் கடந்த 2024 ஆம் ஆண்டு பிளஸ் 2 மாணவி ஒருவரை தவறான எண்ணத்தில் பின்தொடா்ந்து சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து நான்குனேரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அரவிந்த்தை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இவ்வழக்கை, நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து, அரவிந்த்துக்கு ஓா் ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா்.

அரசு தரப்பில் வழக்குரைஞா் உஷா ஆஜரானாா். கடந்த 3 மாதங்களில் 5 போக்ஸோ வழக்குகளில் ஒரு தூக்கு தண்டனை உள்பட 5 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.