திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் 2001, 2006, 2011, 2016 என தொடர்ச்சியாக 4 தேர்தல்களில் வெற்றி வாகை சூடிய பெருமைக்குரியவர் முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான்.
அவர், தனது தேர்தல் அனுபவம் குறித்து கூறியதாவது: 2001 பேரவைத் தேர்தலில் பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை திமுக தலைவர் கருணாநிதி எனக்கு வழங்கினார். அப்போதைய பாளையங்கோட்டை இப்போது போன்ற மாநகரப் பகுதி நிறைந்ததாக இல்லை. பாளையங்கோட்டை ஒன்றியத்தில் உள்ள கிராமங்களும் இத்தொகுதியில் இருந்தன.
அத்தேர்தலில் திமுக-பாஜக கூட்டணி அமைத்து களம் கண்டது. அப்போது பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் எனக்காக திமுக தலைவர் கருணாநிதி பிரசாரம் செய்தார். பாஜக கூட்டணியில் இருந்ததால் மூத்த தலைவரான எல்.கே. அத்வானியும் எங்களை ஆதரித்து திருநெல்வேலி நகரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரசாரம் செய்தார்.
பாஜகவுடன் கூட்டணி அமைத்தபோதிலும்கூட மேலப்பாளையம் மக்கள் எனக்கு வாக்களித்து வெற்றிபெறச்செய்தனர். அந்தத் தேர்தலில் ஒருங்கிணைந்த திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் திமுக கூட்ட ணியில் வெற்றிபெற்ற ஒரே நபர் தான் மட்டுமே. காரணம், நான் எப்போதும் மக்களோடு மக்களாக நின்று பணியாற்றக்கூடியவன்.
எனது தொகுதி மக்களை குடும்ப உறவுகளாகவே பார்த்தேன். எனதுதொகுதிநிதி மூலம் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கண்டேன். என்னால் முடிந்த அளவுக்கு மக்கள் பணியாற்றியதால் அவர்கள் என்னைத் தொடர்ச்சியாக 4 முறை இந்தத்தொகுதியில் வெற்றிபெற வைத்தனர்.
கருணாநிதி ஆட்சியில் நானும் ஒரு பேரவை உறுப்பினராக இருந்தேன், அவரது அமைச்சரவையில் எனக்கும் ஓரிடம் கிடைத்தது என்பது எனக்குப் பெருமை.
நான் வேறு கட்சிகளுக்கு சென்றுவிட்டு மீண்டும் திமுகவில் இணைந்தபோது திமுக தலைவர் கருணாநிதியிடம் மேடையிலேயே பகிரங்கமாக மன்னிப்பு கோரினேன். ஆனால் அவரோ மறப்போம். மன்னிப்போம் என்பதுதானே அண்ணாவின் கொள்கை' எனக் கூறி என்னை அரவணைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?

நெல்லையில் புற்றுநோய்க்கு அதிநவீன சிகிச்சை வசதி: பாளையங்கோட்டை திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப்

கோவில்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நயினார் நாகேந்திரனின் நகர்வு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


