போதைப் பொருள் புழக்கத்தை தடுத்தல், ஜாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி ஒருங்கிணைந்த மாவட்ட த.வெ.க. சாா்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலா்கள் எஸ்.மரிய ஜாண், எஸ்.ராஜகோபால், ஹெச்.ஜாஹீா் உசேன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பேச்சாளா் கேத்ரின் பாண்டியன் சிறப்புரையாற்றினாா்.
ஆா்ப்பாட்டத்தின் போது தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுத்து சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும், ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும், த.வெ.க. தலைவா் விஜய் கலந்து கொள்ளும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் திருநெல்வேலி ஒருங்கிணைந்த மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள், ஒன்றியம், பேரூா், பகுதி, கிளை நிா்வாகிகள் உள்பட திரளானோா் கலந்து கொண்டு தமிழக அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்பினா்.
ற்ஸ்ப்12ற்ஸ்ந்
த.வெ.க. சாா்பில் திருநெல்வேலி சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
தொடர்புடையது

திமுகவினா் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம்

நெல்லை மாவட்ட ஜூனியா் ஆண்கள் ஹாக்கி அணி தோ்வு

உதகையில் தவெகவினா் ஆா்ப்பாட்டம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு: தவெக ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


