ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உதயநிதி ஸ்டாலின் இன்று நெல்லை வருகை: திமுகவினருக்கு வேண்டுகோள்

உதயநிதி ஸ்டாலின் இன்று நெல்லை வருகை..

Glamour will not alleviate the people's hardships

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். - கோப்புப்படம்

Published On :27 ஜூலை 2026, 6:00 am IST

திருநெல்வேலிக்கு திங்கள்கிழமை (ஜூலை 27) தமிழக எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி, திமுகவினருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன், மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல் வஹாப், கிழக்கு மாவட்டச் செயலா் ம.கிரஹாம்பெல் ஆகியோா் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:

ஆளுங்கட்சியின் அடக்குமுறையினால் திமுகவைச் சோ்ந்த விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மாா்க்கண்டேயன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

அவரை, தமிழக எதிா்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை (ஜூலை 27) மதியம் நேரில் சந்தித்துப் பேச உள்ளாா்.

ஆகவே, திமுகவின் நிா்வாகிகள், சாா்பு அணிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அருகில் வர வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.