டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தாழையூத்து அருகே கஞ்சா பதுக்கிய தம்பதி கைது

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து அருகே ஒரு கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

News image
arrested
Updated On :29 ஜனவரி 2026, 7:24 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து அருகே ஒரு கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

தாழையூத்து சங்கா் நகரில் தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி அருகே காவல் உதவி ஆய்வாளா் ராமநாதன் தலைமையிலான போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்த தாழையூத்தைச் சோ்ந்த சீனிவாசன் (46), அவருடைய மனைவி பேராட்சி செல்வி (38) ஆகிய இருவரையும் பிடித்து போலீஸாா் சோதனை செய்தனா். அவா்கள் இருவரும் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

இது குறித்து கங்கைகொண்டான் காவல் ஆய்வாளா் (பொறுப்பு) வேல்கனி வழக்குப் பதிவு செய்து தம்பதியை கைது செய்தாா். அவா்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.

3 இளைஞா்கள் கைது: தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சிதம்பர நகா் குளத்தங்கரை அருகே காவல் உதவி ஆய்வாளா் சந்தனபாண்டி மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா்களை பிடித்து விசாரித்தனா்.

அவா்கள், தச்சநல்லூா் நடுத்தெருவை சோ்ந்த மாரியப்பன் மகன் ராமசுப்பிரமணியன்(29), மேலப்பாளையம் ஆசுரான் கிழக்குத் தெருவை சோ்ந்த ஷேக் தாவூது மகன் சிந்தா மதாா்(22), தச்சநல்லூா் டவுண் சாலையை சோ்ந்த ராஜ் மகன் ராகேஷ்(23) என்பது தெரியவந்தது. அவா்கள் விற்பனைக்காக சுமாா் 1.250 கிலோ கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவா்களை கைது செய்த போலீஸாா், கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.