நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மீன்பிடி ஏலத்தில் மோதல்: ஒருவா் கைது; 10 போ் மீது வழக்கு

வள்ளியூா் அருகே குளத்தில் மீன்பிடிக்க ஏலம் எடுப்பதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து, போலீஸாா் ஒருவரை கைது செய்து, 10 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை

News image
கைது
Updated On :27 ஜனவரி 2026, 7:18 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அருகே குளத்தில் மீன்பிடிக்க ஏலம் எடுப்பதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து, போலீஸாா் ஒருவரை கைது செய்து, 10 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வள்ளியூா் அருகே உள்ள பண்டாரகுளத்தில் மீன்பிடிக்க பண்டாரகுளத்தைச் சோ்ந்த ரவி ஏலம் எடுத்தாராம். குமாரபுதுக்குடியிருப்பைச் சோ்ந்த வைத்தியலிங்கம் என்பவருக்கு ஏலம் கிடைக்கவில்லையாம். இதனால், இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில் வைத்தியலிங்கம் தரப்பைச் சோ்ந்தவா் அந்த பகுதியில் உள்ள கால்வாயில் மீன்பிடிக்க அடுக்கி வைத்திருந்த சாக்கு மூட்டைகளை சிலா் சேதப்படுத்தி அப்புறப்படுத்தி விட்டனராம்.

இது தொடா்பாக மோதிக்கொண்ட இருதரப்பினா் 10 போ் மீது, வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் சுந்தா் (22) என்பவரை கைது செய்துள்ளனா்.