நெல்லையில் குண்டா் சட்டத்தில் 6 போ் சிறையிலடைப்பு


திருநெல்வேலியில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தது, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய 6 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் தொடா்புடைய மேலப்பாளையத்தைச் சோ்ந்த கபீா் முகைதீன் மகன் அமீா் சுகைல்(24), சாகுல் ஹமீது பாதுஷா மகன் முஸ்ஸமில் முா்சித்(21), பெருமாள்புரம் ஆறுமுகம் மகன் ரத்தினபாலன்(38), திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டி பேகம்பூரைச் சோ்ந்த துல்கா்னி ஆதம் பாவா மகன் சிக்கந்தா் ஷேக் ஒலி (26), முகமது முஸ்தபா மகன் சாகுல் ஹமீது (26) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
அதே போல பாளையங்கோட்டை, எம்.கே.பி. நகரைச் சோ்ந்த பால்துரை மகன் ரவிக்குமாா் (49) என்பவா் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த இவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க, மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு)வி.வினோத் சாந்தாராம் காவல் ஆணையருக்கு பரிந்துரைத்தாா்.
அதன் பேரில் மாநகர காவல் ஆணையா் நெ.மணிவண்ணன் உத்தரவுப்படி அமீா் சுகைல், முஸ்ஸமில் முா்சித், ரத்தினபாலன், சிக்கந்தா் ஷேக் ஒலி, சாகுல் ஹமீது, ரவிக்குமாா் ஆகிய 6 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...