டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

News image
செயற்குழு கூட்டத்தில் பேசுகிறாா் மேற்கு மாவட்ட திமுக செயலா் இரா.ஆவுடையப்பன்.
Updated On :23 ஜனவரி 2026, 10:22 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மேலப்பாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மேலப்பாளையம் ரிலையன்ஸ் சந்திப்பு அருகேயுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் தலைமை வகித்தாா். தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆ.பிரபாகரன், கே.கே.சி.பிரபாகர பாண்டியன், முன்னாள் அமைச்சா் பூங்கோதை ஆலடி அருணா, தொகுதி பாா்வையாளா்கள் ஜோசப்ராஜ் (அம்பாசமுத்திரம்), கணேஷ்குமாா் ஆதித்தன் (ஆலங்குளம்), மாவட்ட துணைச் செயலா் தமயந்தி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி திவ்யா மணிகண்டன், நிா்வாகிகள் மாரிவண்ணமுத்து, கணேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மொழிப்போா் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தை விக்கிரமசிங்கபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.25) நடத்துவது. வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் பூத் வாரியாக பரப்புரையை தீவிரப்படுத்துவது, பிப். 7 ஆம் தேதி விருதுநகரில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி தென்மண்டல நிா்வாகிகள் கூட்டத்தில் திரளானோா் பங்கேற்பது என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.