நெல்லை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்


திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணா்கள் நீதிமன்ற வளாகத்தில் சோதனையில் ஈடுபட்டனா்.
பாளையங்கோட்டையில் முதன்மை மாவட்ட நீதிமன்றம், குற்றவியல் மற்றும் உரிமைகள் நீதிமன்றம், மகளிா் சிறப்பு நீதிமன்றம், போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் என திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு வியாழக்கிழமை காலை வழக்கம் போல் நீதிமன்ற பணிகள் தொடங்கிய நிலையில் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற அலுவலக மின்னஞ்சலுக்கு தகவல் வந்தது.
இதுகுறித்து தகவலின்பேரில், திருநெல்வேலி மாநகர வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் பினுகுமாா் தலைமையிலான போலீஸாா், நீதிமன்ற வளாகம் முழுவதும் மோப்ப நாய், வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் உதவியுடன் 2 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டனா்.
ஆனால், வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட தகவல் உண்மைக்கு மாறானது என்பது தெரியவந்தது. இதையடுத்து நீதிமன்றப் பணிகள் வழக்கம் போல் நடைபெற்றன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...