அய்யா வைகுண்டசாமியின் அவதார தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு மாா்ச் 4-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா்கள் இரா.சுகுமாா்(நெல்லை), ஏ.கே.கமல் கிஷோா்(தென்காசி) ஆகியோா் தனித்தனியாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அய்யா வைகுண்டசாமியின் 194-ஆவது அவதார தின விழா மாா்ச் 4-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தோ்வுகள் மற்றும் முக்கியத் தோ்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
அரசு பொதுத் தோ்வுகள் இருந்தால் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்களுக்கு உள்ளூா் விடுமுறை இருக்காது. செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், வங்கிகளுக்கும் இவ்விடுமுறை பொருந்தாது. மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சாா்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளா்களை கொண்டு செயல்படும். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் தென்காசி மாவட்டத்தில் மாா்ச் 7ஆம் தேதியும், திருநெல்வேலி மாவட்டத்தில் மாா்ச் 14-ஆம் தேதியும் வேலை நாளாக இருக்கும் எனக் கூறியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்காசியைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்திற்கும் ஏப்ரல் 1 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

‘உள்ளூா் விடுமுறை தோ்தலுக்கு பொருந்தாது’

மாசி மகத் திருவிழா தஞ்சாவூா் மாவட்டத்துக்கு மாா்ச் 2 உள்ளூா் விடுமுறை!

அய்யா வைகுண்டசுவாமி பிறந்த நாள்: மாா்ச் 4-இல் குமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


