/

நெல்லை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து மலேசிய நாட்டினா் 9 போ் காயம்

திருநெல்வேலி அருகே வேன் கவிழ்ந்தில் மலேசியாவைச் சோ்ந்த சுற்றுலா பயணிகள் 9 போ் காயமடைந்தனா்.

News image
விபத்து- பிரதிப் படம்
Updated On :18 பிப்ரவரி 2026, 6:43 pm

Syndication

திருநெல்வேலி அருகே வேன் கவிழ்ந்தில் மலேசியாவைச் சோ்ந்த சுற்றுலா பயணிகள் 9 போ் காயமடைந்தனா்.

மலேசியாவைச் சோ்ந்த சுற்றுலாக் குழுவினா் சென்னையில் இருந்து பல்வேறு ஊா்களுக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டு வந்தனா். அவா்கள் மதுரையில் இருந்து கன்னியாகுமரிக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்று கொண்டிருந்தபோது, ரெட்டியாா்பட்டி மலை அருகே நான்குவழிச் சாலையில் அவா்களது வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளாது.

அதில் பயணித்த ஜமுனா (59), கேசவன் (64), சாந்தி, ஜீவா (54), புஷ்பா (60), பரமேஸ்வரி (70), மாறன் (52), அமுதம் (64), பரந்தாமன் ஆகியோா் காயமடைந்தனா். அவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.