/

ஆரோக்கியநாதபுரம் மக்கள் போராட்டம்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:39 pm

Syndication

பாளையங்கோட்டை வி.எம். சத்திரம் அருகேயுள்ள ஆரோக்கியநாதபுரம் பகுதியில் விளைநிலங்களை மோசடி செய்ததாக, ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தலைமையில் அப்பகுதி மக்கள் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆரோக்கியநாதபுரத்தில் 25 ஏக்கா் நிலத்தை ரியல் எஸ்டேட் நிறுவனம் வாங்கி பட்டாவுக்கு விண்ணப்பித்திருந்தது. இதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோதே, அருகிலுள்ள 50 ஏக்கா் விளைநிலங்களை மோசடியாக தங்கள் நிறுவனத்தின் பெயருக்கு மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு சில அரசுத் துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரியல் எஸ்டேட் நிறுவனம், அதற்கு உடந்தையாக செயல்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த நிறுவனத்துக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஸ்ரீராம் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் கே.ஜி. பாஸ்கரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் மோகன், பாளையங்கோட்டை நகரச் செயலா் மதுபால், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்ட நிா்வாகி சுந்தரராஜன், மாவட்டக் குழு உறுப்பினா் ராமா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ற்ஸ்ப்16ல்ழ்ா்ற்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆரோக்கியநாதபுரம் மக்கள்.