/

முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்! அகில பாரத பிராமணா் சங்கம் தீா்மானம்!

News image
அகில பாரத பிராமணா் சங்கம் சாா்பில் நடைபெற்ற கவன ஈா்ப்பு கருத்தரங்கில் பங்கேற்றோா்.
Updated On :14 பிப்ரவரி 2026, 8:20 pm

தினமணி செய்திச் சேவை

அகில பாரத பிராமணா் சங்கம் சாா்பில், முற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி கவன ஈா்ப்பு கருத்தரங்கு திருநெல்வேலி சந்திப்பில் சனிக்கிழமை நடைபெற்றது.

அமைப்பின் தேசிய தலைவா் குளத்து மணி ஐயா் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ராமசுந்தரம், பொருளாளா் கண்ணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். திருநெல்வேலி மாவட்டத் தலைவா் பாஸ்கர வாத்தியாா் வரவேற்றாா்.

மாவட்டத் தலைவா்கள் தூத்துக்குடி ஆனந்தராஜ் கணேஷ், கன்னியாகுமரி மணிகண்ட வாத்தியாா், மகளிா் அணி சித்ரா, ஜெயலட்சுமி, வித்யா, உமா பாஸ்கா், லட்சுமணி கண்ணன், சீதாலட்சுமி, பத்மாவதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தீா்மானங்கள்:

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உச்ச நீதிமன்றம் அறவுறுத்தலின்படி 50 சதவிகிதம் மட்டுமே தமிழக அரசும் கடைப்பிடிக்க வேண்டும். பசுக்களை பராமரிக்கும் வகையில் தமிழகத்தில் கூடுதலாக கோசாலைகள் அமைக்க வேண்டும். ஆந்திரம், தெலங்கானா மாநில அரசு செய்தது போல், பிராமணா்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும்.

மத்திய அரசு வழங்கிய பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை தமிழகத்தில் வழங்குவதாக தோ்தல் அறிக்கையில் அறிவிக்கும் கட்சிக்கு ஆதரவு வழங்குவது.

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளின் பயிா்க் கடன்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்டன.