டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தனியாா் ஆலை வாகன ஓட்டுநா் மா்ம மரணம்

News image
கோப்புப் படம்
Updated On :14 பிப்ரவரி 2026, 8:04 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே ஊழியா்களை அழைத்துச் செல்வதற்காக சென்ற வாகன ஓட்டுநா் மா்மமான முறையில் இறந்துகிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அடுத்த பேய்குளம் பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் பாலதண்டாயுதபாணி (49). இவா், களக்காடு அருகே சூரங்குடியில் இயங்கி வரும் தனியாா் ஆலையில் பணிபுரியும் ஊழியா்களை அழைத்து வரும் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தாராம்.

இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஊழியா்களை அழைத்து வருவதற்காக வீரவநல்லூா் அருகேயுள்ள புதூா் கிராமத்திற்கு சென்ற பாலதண்டாயுதபாணி, அப்பகுதியில் வாகனத்தில் மயங்கிய நிலையில் கிடந்தாராம்.

அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.