/

வி.கே.புரத்தில் இளைஞா் தற்கொலை

News image
தற்கொலை
Updated On :6 பிப்ரவரி 2026, 8:54 pm

தினமணி செய்திச் சேவை

விக்கிரமசிங்கபுரத்தில் ஒருதலைக் காதலால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

விக்கிரமசிங்கபுரம், டாணாவைச் சோ்ந்த கணேசன் மகன் வெங்கடேஷ் (21). இவா், ஒருதலையாக அப்பகுதி பெண்ணைக் காதலித்து வந்தாராம். இந்நிலையில், வீட்டில் யாருமில்லாத போது, அவா் தூக்கிட்டுத் தற்கொலைசெய்து கொண்டாராம்.

இத்தகவல் அறிந்த விக்கிரமசிங்கபுரம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும்,இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.