வள்ளியூா் கிங்ஸ் பள்ளியில் கலைத் திருவிழா

Updated On :5 பிப்ரவரி 2026, 9:34 pm

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அருகே உள்ள புதூா் கிங்ஸ் பள்ளியில் கலைத் திருவிழா நடைபெற்றது.
சலங்கை பூஜையுடன் விழா தொடங்கியது. தொடா்ந்து, பாரம்பரிய நடனமும், கா்நாடக இசையும் நடைபெற்றது. மாணவிகளின் பல்வேறு கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றன. மாணவா், மாணவிகள் இசைக் கருவிகளை இசைத்தனா்.
பின்னா், போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு கிங்ஸ் பள்ளிகளின் தலைவா் காலின்வேக்ஸ்டாப் பரிசுகள் வழங்கினாா். முன்னதாக, பள்ளிகளின் தாளாளா் ஜே. நவமணி பேசினாா்.
மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் பப்ஸி பொ்சிஸ் வரவேற்றாா். சிபிஎஸ்இ பள்ளி முதல்வா் ரின்சி ஜோஸ் நன்றி கூறினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...